கொழும்பில் இன்று காலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
20 view
பேலியகொட – கலுபாலம பகுதியில் இன்று (17) காலை நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (ஜன.17) காலை 6.30 அளவில் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். துப்பாக்கி பிரயோகத்தில் 33 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் விடுதலையான ஒருவர் மீதே, துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post கொழும்பில் இன்று காலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் இன்று காலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
