அரசு அதிகாரிகள் வேலை செய்யாததால் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு! அமைச்சரின் கடும் எச்சரிக்கை!
20 view
அரச உத்தியோகத்தர்கள் வேலை செய்யாததற்காக பொதுமக்கள் அரசியல்வாதிகளை குற்றம் சுமத்தும் நிலை ஏற்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கம்பஹா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது: பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். நான் எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன். முன்பு போல் தப்பித்து விடலாமென்று நினைக்க வேண்டாம். கடந்த டிசம்பரில், விவசாயச் சங்கங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூட்டம் நடத்த வேண்டுமென கூறப்பட்டது. அது இன்னும் செய்யப்படவில்லை. இது அதிகாரிகளின் பலவீனமாகும். பொதுவாக ஒரு கிராம சேவைப் பிரிவில் எட்டு அரசு ஊழியர்கள் உள்ளனர். ஒருவர் குறைந்தபட்சம் 40,000 ரூபா சம்பளம் பெறுவாராயின், கிராம சேவை பிரிவில் அவர்களின் சேவைக்காக மாதாந்தம் 3,20,000 ரூபா வழங்கப்படும். பொதுவாக, ஒரு பொது…
The post அரசு அதிகாரிகள் வேலை செய்யாததால் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு! அமைச்சரின் கடும் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசு அதிகாரிகள் வேலை செய்யாததால் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு! அமைச்சரின் கடும் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
