வடக்கில் சிங்கள டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அடித்த அதிஷ்டம்!
9 view
இரண்டாம் மொழி சிங்கள டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்களை வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்து மேலதிக பயிற்சிகளை பெற்ற மாணவர்களே இவ்வாறு பாடசாலைகளில் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளனர். இந்து பௌத்த பேரவையினால் நடாத்தப்படுகின்ற இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை சுமார் 23,000 மாணவர்கள் இதுவரை கற்றுள்ளனர். அதன் முதற்கட்டமாக மேலதிக பயிற்சிகளை பெற்ற ஒரு பகுதி மாணவர்களை தற்காலிக ஆசிரிய பயிற்சியாளராக நியமிக்க வட மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
The post வடக்கில் சிங்கள டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அடித்த அதிஷ்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் சிங்கள டிப்ளோமா பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அடித்த அதிஷ்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
