முல்லையில் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்!
20 view
தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் (இன்று 16)இடம்பெற்றுள்ளது. தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கேணல் கிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
The post முல்லையில் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லையில் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
