வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை உடனடியாக நிறுத்த வேண்டும்! ஏழு மனித உரிமை அமைப்புகள்
19 view
2022, ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர் வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஏழு மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. 29 வயதான வசந்த முதலிகே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசாங்கம் நீண்டகாலமாக நீக்குவதாக உறுதியளித்த ஒரு கொடூரமான சட்டமாகும் என்று மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. முதலிகேவின் பிணை மனு மீதான விசாரணை, நாளைய தினம் நீதிமன்றத்தில் நடத்தப்படவுள்ளது. எனினும், அரசாங்கத்தின் சார்பாகச் செயல்படும் சட்டமா அதிபர் திணைக்களம் அதை எதிர்த்தால் நீதிமன்றம் பிணையை அனுமதிக்காது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து, ஆட்சி சீர்திருத்தம் மற்றும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பெரும்பாலும் அமைதியான போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் அரசாங்கம்…
The post வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை உடனடியாக நிறுத்த வேண்டும்! ஏழு மனித உரிமை அமைப்புகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை உடனடியாக நிறுத்த வேண்டும்! ஏழு மனித உரிமை அமைப்புகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
