யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து – சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழப்பு
9 view
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று திங்கட்கிழமை(16) மதியம் 3.30 மணியளவில் பட்டா வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியே விபத்து ஏற்பட்டது. மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பட்டா வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து – சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து – சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
