ஜெயம் ரவியின் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு!
20 view
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘இறைவன்’ திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘என்றென்றும் புன்னகை’ திரைப்படத்தின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவான இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் பொங்கல் தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளனர். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கராஜா இசையமைத்துள்ளார். இப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
The post ஜெயம் ரவியின் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜெயம் ரவியின் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
