சோரம் போகின்ற தமிழ்த் தலைமைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்! கிராமிய உழைப்பாளர் சங்கம்
10 view
அரசின் சூழ்ச்சிகளுக்கு சோரம் போகின்ற மதகுருமார்களாக இருந்தாலும் சரி அரசியல் தலைமைகளாக இருந்தாலும் சரி அவர்களை பயன்படுத்தி ஒவ்வொரு காரியத்தையும் கனகச்சிதமாக நடாத்தி முடித்துக்கொண்டு செல்கின்றனர் என கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் N.இன்பநாயகம் தெரிவித்தார். தேசிய பொங்கல் தினம் நேற்றையதினம் யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், போராட்டகாரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகங்கள் மூலமாக போராட்டகாரர்களை முன்னேறவிடாது தடுத்தனர். இந்நிலையில் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் N.இன்பநாயகம், போராட்டத்தின் விளைவாக பாரியதொரு சவாலுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்தப் போராட்டம் எமது கவனத்தை திசை திருப்பியிருக்கின்றது. போராட்டத்திற்கான ஒரு பெறுமதியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனென்றால் போராட்டக்களத்தில் நடந்து கொண்ட விதம்,…
The post சோரம் போகின்ற தமிழ்த் தலைமைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்! கிராமிய உழைப்பாளர் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சோரம் போகின்ற தமிழ்த் தலைமைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்! கிராமிய உழைப்பாளர் சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
