காசி புனித தீர்த்தத்தை யாழ்ப்பாண குளத்திற்குள் கலந்த இந்தியாவின் முக்கியஸ்தர்!
9 view
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்றையதினம் உலகளாவிய ரீதியாக நடைபெற்றது. பொங்கலுக்கு அடுத்த நாளான இன்றையதினம், உழவுத் தொழிலுக்கு அளப்பரிய பணியாற்றிய பசுக்களுக்கும் காளைகளுக்கும் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்றையதினம் யாழ். வட்டுக்கோட்டை – அராலி உப்புவயல் குளத்தருகில் பட்டிப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கலாநிதி சிதம்பரமோகன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார். கலாநிதி சிதம்பரமோகன் அவர்களால், இந்தியா காசியில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித காசி தீர்த்தமானது யாழ். இந்திய துணைத் தூதுவரால் குளத்தில் கலக்கப்பட்டது. பின்னர் பட்டிப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் கலாநிதி சிதம்பரமோகன், யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், நாக விகாரை விகாராதிபதி, வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
The post காசி புனித தீர்த்தத்தை யாழ்ப்பாண குளத்திற்குள் கலந்த இந்தியாவின் முக்கியஸ்தர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காசி புனித தீர்த்தத்தை யாழ்ப்பாண குளத்திற்குள் கலந்த இந்தியாவின் முக்கியஸ்தர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
