யாழில் அம்மன் ஆலயத்திலிருந்து திடீரென மாயமான நாகபாம்பு : அதிர்ச்சியில் பக்தர்கள்!
27 view
யாழ் மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபரொருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர்,சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது. அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்றுள்ளார் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
The post யாழில் அம்மன் ஆலயத்திலிருந்து திடீரென மாயமான நாகபாம்பு : அதிர்ச்சியில் பக்தர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் அம்மன் ஆலயத்திலிருந்து திடீரென மாயமான நாகபாம்பு : அதிர்ச்சியில் பக்தர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
