கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவருக்கு ஏற்பட்ட நிலை!
9 view
ஹொரணை, கும்புக பிரதேசத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொக்குனுவிட்டயில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற காரை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று கும்புக பிரதேசத்தில் உள்ள வயல்வெளிக்கு அருகில் நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பாணந்துறை கெசல்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு சுட்டுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்த வர்த்தகர் ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவருக்கு ஏற்பட்ட நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவருக்கு ஏற்பட்ட நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
