வல்லை பட்டத் திருவிழாவில் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த இளைஞன்: குவியும் பாராட்டுக்கள்!
8 view
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் யாழ் வல்வெட்டித்துறை உதய சூரியன் உல்லாசக் கடற்கரையில் விசித்திர பட்டத்திருவிழா பல்லாயிரக்கணக்காண மக்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. குறித்த பட்டத் திருவிழாவில் பலவிதமான வண்ணங்களில் விசித்திரமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்து5 வருடங்களாக வல்வை பட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்ற பட்டக்கலைஞனான பிரஷாந் 6வது தடவையாக இம்முறையயும் முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார். வல்வெட்டித்துறைக்கே உரித்தான பட்ட திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய பிரஷாந்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருவதுடன் சமூகவலைத்தளங்களிலும் அவரது பட்டங்கள் வைரலாகி வருகின்றது.
The post வல்லை பட்டத் திருவிழாவில் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த இளைஞன்: குவியும் பாராட்டுக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வல்லை பட்டத் திருவிழாவில் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த இளைஞன்: குவியும் பாராட்டுக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
