கொழும்பில் பேஸ்புக் விருந்து – சிக்கிய கோடீஸ்வர்களின் பிள்ளைகள்!
8 view
கொழும்பு கொம்பனி வீதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் 30வது மாடியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற போதைப்பொருள் விருந்தொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அங்கு போதைப்பொருளுடன் யுவதியொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர்களிடம், ஒரு கிராம் கொக்கெய்ன், ஐந்து கிராம் குஷ் மற்றும் டான்சின் மாத்திரை என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விருந்து பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் விருந்து நடைபெறுவதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கோட்டை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விருந்தில் சுற்றிவளைக்கச் சென்றபோது, பெரும்பாலான இளைஞர் யுவதிகள் குடிபோதையில் இருந்தனர். அவர்கள் கடமைகளைச் செய்யும் போது போதைப்பொருள் வைத்திருந்தவர்களை மட்டுமே அடையாளம் கண்டு கைது செய்தனர்.…
The post கொழும்பில் பேஸ்புக் விருந்து – சிக்கிய கோடீஸ்வர்களின் பிள்ளைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் பேஸ்புக் விருந்து – சிக்கிய கோடீஸ்வர்களின் பிள்ளைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
