மின் கம்பத்துடன் கப் வாகனம் மோதி கோர விபத்து..!
9 view
வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்திலியாறு பகுதியில் இராணுவ காவரணில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட பரலை மோதித்தள்ளிக்கொண்டு கப் வாகனம் பயணித்தது. இதன்போது, வீதியின் அருகில் இருந்த மின்கம்பம் இரண்டினை சேதப்படுத்தியவாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆயினும் அரச சொத்துக்களை சேதப்படுத்தியமையால், மின்கம்பத்துக்குரிய நட்டயீட்டினை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. சபவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த விபத்தினால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் மின்சார சபையினர் மதிப்பிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post மின் கம்பத்துடன் கப் வாகனம் மோதி கோர விபத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் கம்பத்துடன் கப் வாகனம் மோதி கோர விபத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
