மூதூர் வருகை தந்த றிசாட் பதியுதீன்!!
8 view
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மூதூர் பகுதியிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மூதூரில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப்பின் அழைப்பின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் இதில் கலந்து கொண்டார். இவ் கூட்டத்தில் மூதூர் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பா.உ றிசாட் பதியுதீன் உரையாற்றுகையில் – இதற்கு முதல் நடைபெற்ற தேர்தலில் வேறு கட்சிகளுக்கு அதிகாரத்தை கொடுத்தீர்கள் இம்முறை எமது கட்சிக்குத் தாருங்கள்.இத்தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுங்கள். மூதூரில் வறுமைப்பட்டவர்கள், மீனவர்கள், தொழிலாளிகள் என பலர் இருக்கின்றீர்கள்.உங்களுக்கு வசந்தம் கிடைக்க இம்முறை எமக்கு ஆதரவு தாருங்கள். நாடு…
The post மூதூர் வருகை தந்த றிசாட் பதியுதீன்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூர் வருகை தந்த றிசாட் பதியுதீன்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
