புன்சிரிப்புடன் தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட ரணில்!
7 view
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறும் தேசிய பொங்கல் நிகழ்வில் பங்கெடுத்தார். முன்னதாக நல்லூர் சிவன் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வை ஆரம்பித்த ஜனாதிபதி அதன் பின்னர் மேளதாளங்களுடன் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டதோடு அங்கு பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதியுடன் இராணுவத் தளபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், சமய தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
The post புன்சிரிப்புடன் தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புன்சிரிப்புடன் தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட ரணில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
