யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்? தமிழ் மக்களே தீர்மானிப்பர்! – சுமந்திரன் திட்டவட்டம்
9 view
”யார் தமிழ் கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சித் தேர்தலிலேயே அது தெரியும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். ரெலோ, புளொட் கட்சிகள் மேலும் மூன்று கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது என்றும் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கின்றமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கடைசியாகக் கொழும்பில் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளி கட்சி கூட்டத்தில் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மூன்று கட்சிகளும் தத்தம் விருப்பப்படி தனித்தனியாகவோ, தமக்குள் கூட்டாகவோ எதிர்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை ஒரு கட்சியும் பயன்படுத்தக் கூடாது என சம்பந்தன் ஐயாவிடம் ஓர் உறுதிமொழி வழங்கப்பட்டது. அதனை ரெலோ, புளொட் கட்சிகள் இப்போது மீறி உள்ளன. அதற்காக…
The post யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்? தமிழ் மக்களே தீர்மானிப்பர்! – சுமந்திரன் திட்டவட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்? தமிழ் மக்களே தீர்மானிப்பர்! – சுமந்திரன் திட்டவட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
