சுதந்திர தினத்தின் பின் பெண் எம்.பி. ஒருவருக்கு அமைச்சு பதவி? – வெளியான தகவல்
9 view
முன்னதாக திட்டமிட்டபடி அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் நடக்காது என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக இரண்டு பேருக்கு அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் இந்த நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சு பதவி கிடைக்கும் என்றும் அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மாகாணங்களுக்கு புதிதாக ஆளுநர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
The post சுதந்திர தினத்தின் பின் பெண் எம்.பி. ஒருவருக்கு அமைச்சு பதவி? – வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுதந்திர தினத்தின் பின் பெண் எம்.பி. ஒருவருக்கு அமைச்சு பதவி? – வெளியான தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
