ஓமானிலிருந்து மேலும் 15 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!
8 view
ஓமானின் மஸ்கட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மேலும் 15 இலங்கை பணிப்பெண்கள் இன்று (15) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். 17 பேர் வரவிருந்த நிலையில், ஆவணச் சிக்கல்கள் காரணமாக இருவரை மஸ்கட் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடந்த வாரமும், பாதுகாப்பு இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு பெண்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் நான்கு பேரால் ஆவணங்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக நாடு திரும்ப முடியாமல்போனது. இதேவேளை, ஓமானின் பாதுகாப்பு இல்லத்தில் 118 இலங்கை பணிப்பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 67 வயதான பெண்ணொருவர் அண்மையில் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.
The post ஓமானிலிருந்து மேலும் 15 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓமானிலிருந்து மேலும் 15 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
