ஜனாதிபதி ரணில் நாகவிகாரைக்கு விஜயம்
9 view
தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தினை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழிற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்தடைந்தார். இதன்போது ஜனாதிபதியினை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றிருந்தனர். இதையடுத்து, தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாக விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். மதியம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, துர்க்கா தேவி மண்டபத்தில் 3.00 மணியளவில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
The post ஜனாதிபதி ரணில் நாகவிகாரைக்கு விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணில் நாகவிகாரைக்கு விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
