ஐ.தே.க. அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!
18 view
வாரியபொல – திகிதவ பிரதேசத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உருவம் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்று சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் குழுவொன்று இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வாரியபொல தொகுதி பிரதம அமைப்பாளர் தனுஷ்க பாலசூரிய தெரிவித்தார். இந்த அலுவலகத்தை அகற்றுமாறு நேற்று மதியம் வருகைத் தந்த சிலர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
The post ஐ.தே.க. அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.தே.க. அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
