அரசின் முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள சந்தர்ப்பம்! பொங்கல் தினத்தில் ஜனாதிபதியின் செய்தி
8 view
நாட்டின் உணவுப் பாதுகாப்பு, போஷாக்கை உறுதிசெய்யும் தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக, இவ்வருட தைப்பொங்கல் பண்டிகையை கருதுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, தமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல் பண்டிகையின் போது, அதிக விளைச்சலைப் பெறுவதற்கு ஆசி வேண்டி சூரிய பகவானுக்கு வழிபாடு செய்கிறோம். கிழக்காசியாவின் தானியக் களஞ்சியம் என்றழைக்கப்படும் இலங்கையில், உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிசெய்து தன்னிறைவுள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான அர்த்தமுள்ள சந்தர்ப்பமாக இவ்வருட தைப்பொங்கல் அமையட்டும். விவசாயத்தை நவீனமயப்படுத்துவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. அதேவேளை சர்வதேச சந்தையின் போட்டித் தன்மைக்கேற்ப தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வினைத்திறனுடனான இலாபகரமான விவசாயத்தை உருவாக்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அரசாங்கத்தின் இப்புதிய பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்புத் திட்டத்திற்கு…
The post அரசின் முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள சந்தர்ப்பம்! பொங்கல் தினத்தில் ஜனாதிபதியின் செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசின் முயற்சிகளுக்கு அர்த்தமுள்ள சந்தர்ப்பம்! பொங்கல் தினத்தில் ஜனாதிபதியின் செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
