ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
17 view
தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்தினை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்து இறங்கவுள்ளார். அதன்பின், காலை 09.00 மணியவில் நாகவிகாரைக்குச் சென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கவுள்ளார். அதைதொடர்ந்து யாழ்.ஆயர் இல்லம், நல்லை ஆதனம் போன்ற இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார். பின்னர், மதியம்நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, துர்க்கா தேவி மண்டபத்தில் 3.00 மணியளவில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். அதைதொடர்ந்து கச்சேரியில் காணி விடுவிப்புத் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
The post ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
