இனத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! – மாவை அறிவிப்பு
9 view
தமிழ் மக்களின் விடுதலைக்காக மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்குவதற்கு தயாராகவே இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திட்டமை தொடர்பாக ‘சமூகம் மீடியா’ மாவை சேனாதிராஜாவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேள்விகளை எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனித்து போட்டியிடுவது என்ற தீர்மானத்தை எடுத்த பின்னர் கூட புளொட்டுடனும் ரெலோவுடனும் இணைந்து இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலில் இணைந்திருந்ததாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர்கள் வோறாக செயற்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கூட்டாகவோ அல்லது கட்சியாகவோ செயற்பட்டாலும் இனத்தின் விடுதலைக்காக தமிழரசு கட்சி மீண்டும் ஒன்றுபட்டு வேலை செய்வோம் என்ற மனநிலையில் உள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
The post இனத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! – மாவை அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! – மாவை அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
