வவுனியாவில், தனியார் மருந்தகத்தில் 42,700 போதை மருந்துகள் கொள்வனவு – அறிக்கை சமர்ப்பிப்பு!
19 view
வவுனியாவில் சில மருந்தகங்களில் போதை மருந்து கொள்வனவு பாரிய குற்றமாகும் எனவும் தேவையேற்படின் பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள தனியார் மருந்தகங்களில் போதையினை ஏற்படுத்தும் மருந்து விற்பனை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நிலக்சன் , வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி யூட் பிரீஸ் , வவுனியா மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிகளான பிரசன்னா மற்றும் அரங்கன் , உணவு மருந்து பரிசோதகர் , வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை ஆகியோர் அடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமையானது, வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ஓர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அங்கு குறித்த (போதையினை ஏற்படுத்தக்கூடிய) PREGABALIN CAPSULES மருந்துகள் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தவறான முறையில் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளமையும் உறுதி செய்யப்பட்டமையுடன் குறித்த வைத்திய நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.…
The post வவுனியாவில், தனியார் மருந்தகத்தில் 42,700 போதை மருந்துகள் கொள்வனவு – அறிக்கை சமர்ப்பிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில், தனியார் மருந்தகத்தில் 42,700 போதை மருந்துகள் கொள்வனவு – அறிக்கை சமர்ப்பிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
