புதிய கொரோனா ஒழுங்கு முறை இரத்து!!
18 view
நேற்றையதினம் வெளியிடப்பட்ட கொரோனா ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவது ஜனவரி 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கைக்குள் உள்நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்காக வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் செல்லுபடியாகாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். கெரோனா ஒழுங்குவிதிகளை வெளியிடும் அதிகாரம் சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மாத்திரமே உள்ளது என்று சுகாதார அமைச்சு இன்று (14) தெரிவித்துள்ளது. 17ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலுக்கு பின்னரே அது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post புதிய கொரோனா ஒழுங்கு முறை இரத்து!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய கொரோனா ஒழுங்கு முறை இரத்து!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
