தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை வழங்காது காலம் தாமதித்தால் மீண்டும் இளைஞர்கள் போராட கூடும் -சரவணபவன்!
9 view
தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை வழங்காது இந்த அரசு காலம் தாமதித்தால் மீண்டும் இளைஞர்கள் போராட கூடும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்றைய தினம் வட்டுக்கோட்டை அராலி பகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பொதியினை வழங்கி வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பலதடவைகள் யாழ்ப்பாணத்திற்கு அனைத்து ஜனாதிபதிகளும் வந்து சென்று விட்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் முதல் காணிகள் விடுவிப்பு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உடனடியாக தீர்வு தருகின்றோம் என சொல்லத் தொடங்கினார்கள். நல்லாட்சி காலத்தில் ஜனாதிபதியாக வந்த பொழுது நாங்கள் தமிழர்களினுடைய நிரந்தர தீர்வுகள் உட்பட தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்படும் என்று நமக்கு வாக்குறுதி அளித்தார்கள். இப்பொழுது ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்க அந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக செயல்பட்டார். ஒன்றை மட்டும் நாளை யாழ்ப்பாணத்திற்கு…
The post தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை வழங்காது காலம் தாமதித்தால் மீண்டும் இளைஞர்கள் போராட கூடும் -சரவணபவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை வழங்காது காலம் தாமதித்தால் மீண்டும் இளைஞர்கள் போராட கூடும் -சரவணபவன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
