பதவிகளை இழந்தனர் – இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் – சுழற்சி முறையில் பதவிநிலை.!
8 view
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக செயற்பட்டிருந்த இரா.சம்பந்தனின் பதவி இழக்கும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியுள்ள நிலையில் சுமந்திரனின் ஊடகப்பேச்சாளர் பதவியும் கேள்விக்குறியாகியுள்ளது. இன்றையதினம் 5 கட்சிகள் இணைந்து புதிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள நிலையில் புதிய தலைவர் மற்றும் பேச்சாளர் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக த.சித்தார்த்தன் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை ஊடகப்பேச்சாளராக சுரேஸ் பிரேமச்சந்திரன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவி மற்றும் பேச்சாளர் பதவிகள் ஒரு சுழற்சி முறையில் நியமிக்கப்படுவார்கள் என் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் இரா.சம்பந்தனே தொடர்ச்சியாக தலைவர் பதவியில் இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை தமிழரசு கட்சி மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில்…
The post பதவிகளை இழந்தனர் – இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் – சுழற்சி முறையில் பதவிநிலை.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பதவிகளை இழந்தனர் – இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் – சுழற்சி முறையில் பதவிநிலை.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
