அலிரேசா அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவிப்பு!
7 view
ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய-ஈரானிய இரட்டைப் பிரஜையான அலிரேசா அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட திகதியை குறிப்பிடாமல், அலிரேசா அக்பரி தூக்கிலிடப்பட்டதாக ஈரானிய நீதித்துறையின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் அக்பரியின் காணொளியை ஈரான் வெளியிட்டது. ஈரானின் உளவுத்துறை அமைச்சகம், அக்பரி ஈரானில் உள்ள பிரித்தானிய உளவுத்துறையின் மிக முக்கியமான முகவர்களில் ஒருவர்’ என்று கூறியது. அக்பரியின் குடும்பத்தினர் புதன்கிழமை இறுதி வருகைக்காக சிறைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் மற்றும் அவர் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டதாக அவரது மனைவி கூறினார். முன்னாள் துணை ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் 2019இல் கைது செய்யப்பட்டார் மற்றும் பிரித்தானியாவிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். எனினும், அந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். முன்னதாக, மரணதண்டனையை நிறுத்தி, அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஈரானிடம் பிரித்தானியா வலியுறுத்தியது. பிரித்தானிய வெளியுறவுச் செயலர்…
The post அலிரேசா அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அலிரேசா அக்பரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
