சமுர்த்தி கொடுப்பனவிற்கு பதிலாக – 10 கிலோ அரிசி – ஜனாதிபதி அறிவிப்பு!!
8 view
சமுர்த்திக் கொடுப்பனவுகள் கிடைக்காத சுமார் 20 இலட்சம் குடும்பங்களுக்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 கிலோ அரிசி வீதம் வழங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் காலாண்டின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 2024ஆம் ஆண்டு இந்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமாயின், அரச துறை மாத்திரமன்றி தனியார் துறையும் வலுப்பெற வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இன்று மக்கள் படும் இன்னல்களை தாம் மறந்து விடவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வாறேனும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். முதலில் மக்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்க முடியும்…
The post சமுர்த்தி கொடுப்பனவிற்கு பதிலாக – 10 கிலோ அரிசி – ஜனாதிபதி அறிவிப்பு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமுர்த்தி கொடுப்பனவிற்கு பதிலாக – 10 கிலோ அரிசி – ஜனாதிபதி அறிவிப்பு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
