போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்த விக்கிக்கு அருகதை இல்லை! – சிவாஜி காட்டம்

30 view
ஜனநாயக போராளிகள் கட்சி மீது தேவையில்லாத விமர்சனங்களை முன்வைக்கவேண்டாமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணிக்கு தன்னை செயலாளராக நியமிக்க வேண்டுமென்றே விக்கினேஸ்வரன் வலியுறுத்தியதாகவும்  அவர் வெளியேறியதற்கு ஜனநாயக போராளிகள் கட்சி காரணம் இல்லை என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு மற்றும் இன்று காலை வரை விக்கினேஸ்வரனுடன் கலந்துரையாடியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயத போராட்டத்தில், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிர் பலியாலும், 50 ஆயிரத்திற்கும் அதிகமான போரளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதற்கு எவருக்கும் அருகதை கிடையாது என எம்.கே.சிவாஜிலிங்கம் காட்டமாக தெரிவித்துள்ளார். அனைவருடனும் சேர்ந்து இயங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரக இருப்பதாகவும் தமது ஒத்துழைப்பு பூரணமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏனையவர்கள் இதில் இணையவில்லை என்றால் அதற்கு தாங்கள் பொறுப்பு இல்லை என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்திருந்தார்.
The post போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்த விக்கிக்கு அருகதை இல்லை! – சிவாஜி காட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース