தேர்தல் வரும் ஆனால் வராது – நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் இராதாகிருஸ்ணன்.!
9 view
உள்ளுராட்சி, மன்ற தேர்தல் வரும் ஆனால் வராது என்ற நிலையிலேயே காணப்படுவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற, உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஏனெனில், தேர்தலை ஒத்திவைப்பதற்காக பல வழிகளிலும் ஆட்சியாளர்கள் முயற்சித்து வருவதாகவும் எது எப்படி இருந்தாலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருப்பதாகவும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடுவதானவும் 75 சதவீத இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
The post தேர்தல் வரும் ஆனால் வராது – நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் இராதாகிருஸ்ணன்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் வரும் ஆனால் வராது – நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் இராதாகிருஸ்ணன்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
