தமிழினத்தை வழி நடத்தக்கூடிய தனியான ஒரு தலைவர் இன்று இல்லை – கூட்டு தலைமைத்துவமே அவசியம்.!
8 view
வடகிழக்கிலுள்ள, இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்ற அடிப்படையில் பார்வையாளர்களாக இல்லாது தமிழ் தேசிய, இனத்தினுடைய விடுதலையை வென்று எடுப்பதற்கான நடவடிக்கைகளை கையேற்பதற்கு முன்வருமாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்த்தரணியுமான ந.சிறிகாந்தா அழைப்பு விடுத்துள்ளார். இன்று யாழில், பரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தார். தங்களுடைய காலம் மெல்ல மெல்ல முடிவடைந்த வண்ணம் உள்ளதாகவும் எனவே இளைஞர்களை முன்வருமாறு பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார். ஒருசிலர் தாங்களே இந்த அரசியல் பரப்பில் நிரந்தரமானவர்கள் எ;று நினைத்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இங்கு யாரும் மாபெரும் தலைவர்கள் என்றும் எவரும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். ஒட்டுமொத்த தமிழினத்தையும் வழிநடத்துவதற்கு இன்று தனியாக ஒரு தலைவரை குறிப்பிட்டு கூறமுடியாது என்றும் ந.சிறிகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார். இது ஒரு கசப்பான உண்மை என்றும் அவர் குறிப்பிட்டார்.
The post தமிழினத்தை வழி நடத்தக்கூடிய தனியான ஒரு தலைவர் இன்று இல்லை – கூட்டு தலைமைத்துவமே அவசியம்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழினத்தை வழி நடத்தக்கூடிய தனியான ஒரு தலைவர் இன்று இல்லை – கூட்டு தலைமைத்துவமே அவசியம்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
