இலங்கை வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு
7 view
சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னர் பெற்றுக்கொண்ட பி.சி.ஆர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை, ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டாயமாக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது. இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொவிட்-19 சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று அறிவித்தார். கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு, 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். யுக்ரைன் – ரஷ்ய யுத்தம் காரணமாக, ரஷ்யாவுக்கு, உலகின் பல நாடுகள் பயணத் தடை விதித்துள்ள சூழ்நிலையில், ஏரோ ப்ளோட் நிறுவனம் கடந்த ஒக்டோபர் இலங்கைக்கு பயணத்தை முன்னெடுத்ததாக கடிதம் ஒன்றின் மூலம் உதயங்க வீரதுங்க, சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட புதிய…
The post இலங்கை வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
