இலங்கையின் தொழிலாளர் இடம்பெயர்வு ஆய்வு அறிக்கை கையளிப்பு!
11 view
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள், இலங்கையின் தொழிலாளர் இடம்பெயர்வு ஆய்வு தொடர்பான அறிக்கையை, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கையளித்துள்ளனர். அந்த அறிக்கையில், இலங்கையில் தொழிலாளர் இடம்பெயர்வு தொடர்பாக. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட 59 ஆய்வுகள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. தொழிலாளர் இடம்பெயர்வு உட்பட, அது தொடர்பான தரவுகளுடன் கூடிய இந்த ஆய்வறிக்கை, எதிர்கால ஆய்வுக்குத் தேவையான அறிவுசார் இடைவெளியை நிரப்ப வழிவகுக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
The post இலங்கையின் தொழிலாளர் இடம்பெயர்வு ஆய்வு அறிக்கை கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் தொழிலாளர் இடம்பெயர்வு ஆய்வு அறிக்கை கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
