இலங்கையில் தங்க கடன் அட்டை – விமான நிலையத்தில் வசமாக சிக்கிய பெண்
8 view
இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வர பயன்படுத்தப்படும் புதிய முறையை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 24 கரட் தங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கடன் அட்டைகளை கடத்தி வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனைத்தில் வைத்து சங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பார்ப்பதற்கு வங்கிகள் வழங்கிய கடன் அட்டைகளை போல் இருக்கும் வகையில் இந்த தங்க கடன் அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான பெண்ணே இந்த தங்கத்தை கடத்தி வந்துள்ளார். இவர் அடிக்கடி விமான பயணங்களை மேற்கொண்டு வருபவர் என சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பெண் கடந்த 12 ஆம் திகதி அதிகாலை 1.52 அளவில் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்த கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வந்துள்ளார். இந்த பெண் முதலில் துபாய் நாட்டில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து…
The post இலங்கையில் தங்க கடன் அட்டை – விமான நிலையத்தில் வசமாக சிக்கிய பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் தங்க கடன் அட்டை – விமான நிலையத்தில் வசமாக சிக்கிய பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
