ஜந்து தமிழ் கட்சிகள் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து!
7 view
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதின. மதியம் 12.20 மணியளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை(14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கூட்டணி ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த.சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர். புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(13)இடம்பெற்ற கட்சிகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முடிவுக்கமைய ஒப்பந்தம் கைச்சாத்தானது. சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் நேற்றைய…
The post ஜந்து தமிழ் கட்சிகள் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜந்து தமிழ் கட்சிகள் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
