அரசாங்கம் ஏமாற்றிவிட்டது:தமிழ் மக்களே ஒன்றுபடுங்கள் – தாயொருவர் மன்றாட்டம்.!
12 view
ஒரு மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை எல்லாமே கம்பிக்;கூட்டிற்குள் முடிவடைந்து விட்டதாகவும் இனியாவது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டுமென தமிழ் அரசியல் கைதியொருவரின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் வாழ்க்கையில் வாழ வேண்டிய நாட்கள் சிறைச்சாலைக்குள்ளே முடிந்து விட்டதாகவும் எனவே விரைந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த பொங்கலுக்கு விடுவிக்கப்படுவார்கள் என்று காத்திருந்து ஏமாந்து விட்டதாகவும் எனவே தமிழ் மக்கள் அனைவரும் இவர்களின் விடுதலைக்காக ஒன்றுபடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post அரசாங்கம் ஏமாற்றிவிட்டது:தமிழ் மக்களே ஒன்றுபடுங்கள் – தாயொருவர் மன்றாட்டம்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசாங்கம் ஏமாற்றிவிட்டது:தமிழ் மக்களே ஒன்றுபடுங்கள் – தாயொருவர் மன்றாட்டம்.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
