முட்டையால் அதிக இலாபத்தை ஈட்டும் இடைத் தரகர்கள்!
8 view
முட்டை உற்பத்தியாளர்களை விடவும், இடைத் தரகர்கள் தற்போது அதிக இலாபம் ஈட்டுவதாக அகில இலங்கை விலங்கு அபிவிருத்தி ஆலோசகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டீ.ஓ. நிஷாந்த குமார தெரிவித்துள்ளார். முட்டையின் விலை பற்றி சகல சந்தர்ப்பங்களிலும் பேசப்படுகின்றதே தவிர, உற்பத்தியாளரின் செலவு குறித்து பேசப்படுவதில்லை. உற்பத்தியாளரிடமிருந்து, நுகர்வோருக்கு முட்டை கிடைக்கும் நிலை வரையான இடைவெளி குறித்த கவனம் செலுத்த வேண்டும். எனவே, இடைத்தரகர்களினால் ஏற்படும் இடைவெளியைக் குறைப்பதன் மூலம், முட்டை உற்பத்தி தொழிற்துறைக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்த முடியும் என அகில இலங்கை மிருக அபிவிருத்தி ஆலோசகர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
The post முட்டையால் அதிக இலாபத்தை ஈட்டும் இடைத் தரகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டையால் அதிக இலாபத்தை ஈட்டும் இடைத் தரகர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
