இலங்கையில் வாரிசா? துணிவா? – வசூல் விபரம் இதோ!
9 view
இந்த பொங்கல் விஜய், அஜித் ரசிகர்கள் செம விருந்தாக அமைந்தது. வாரிசு – துணிவு என இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்து திரையரங்கங்கள் திருவிழா கோலத்திற்கு மாறியது. முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வசூல் வேட்டை நடாத்தி வருகின்றன. இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் இலங்கையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் வாரிசு படம் இரண்டு நாள் முடிவில் 11.80 கோடி (2.62 கோடி இந்திய ரூபாய்) ரூபாய்களை வசூலித்துள்ளது. அதேபோல், துணிவு திரைப்படம் இரண்டு நாள் முடிவில் 7.38 கோடி (1.64 கோடி இந்திய ரூபாய்) ரூபாய்களை வசூலித்துள்ளது. அந்த வகையில் முதல் இரண்டு நாட்களில் வாரிசு படம் இலங்கையில் முன்னிலை பெற்றுள்ளது.
The post இலங்கையில் வாரிசா? துணிவா? – வசூல் விபரம் இதோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் வாரிசா? துணிவா? – வசூல் விபரம் இதோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
