தேசிய பொங்கல் என ரணில் தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது! அருட்தந்தை மா.சத்திவேல்
7 view
தேசிய பொங்கல் என ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தைப்பொங்கல் என்பது பானையும், அரிசியும், அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல உழைப்பாளரின் வியர்வை அதனால் விளைந்த விளைச்சல் உழைப்பு, உழைப்புக்கு அடிப்படை காரணமான மண் அதனுடைய உரிமை கலந்த விடயமாகும். இதிலே வாழ்வும் வளமும் தங்கி இருக்கின்றது. கலாச்சார சிறப்போடு தேச உணர்வும் அதன் பாதுகாப்பும் அதற்கான உறுதியும் மேலோங்கி இருக்கின்றது.இவற்றையெல்லாம் சிதைத்தழித்து தொடர் அழிவுகளுக்கும் திட்டமிட்டு கொண்டு தேசிய பொங்கல் என்று ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ நாம் எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது. வியர்வை விதைத்த நிலம், உழுது விளைந்த நிலம், பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு உறவுகளோடு…
The post தேசிய பொங்கல் என ரணில் தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது! அருட்தந்தை மா.சத்திவேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய பொங்கல் என ரணில் தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது! அருட்தந்தை மா.சத்திவேல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
