புதிய தமிழ்க் கூட்டணி – புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து!
7 view
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் நேற்று அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையொப்பமிடப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில், புதிய கூட்டணி தொடர்பான அறிவித்தல் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்தப் புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ்ப்பாணத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்தார். இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் வைத்து கையொப்பமிடப்பட உள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
The post புதிய தமிழ்க் கூட்டணி – புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய தமிழ்க் கூட்டணி – புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
