புதிய கூட்டணிக்கு மான் சின்னத்தை மறுத்த புளொட், ரெலோ!
7 view
தமிழ் மக்கள் கூட்டணியான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் முன்வைத்த கோரிக்கையை தாம் ஏற்கவில்லை என்றும் தாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்காத நிலையில் அவர்கள் கலந்துரையாடலில் இருந்து வெளியேறியமாக புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணி தொடர்பான கலந்துரையாடல் நிறைவு பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். புதிய கூட்டணி தமது மான் சின்னத்திலேயே போட்டியிடவேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் உறுதியாக இருந்த நிலையில் அதற்கு ஏனைய கட்சிகள் மறுப்பு தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புதிய கூட்டணியை உருவாக்கினாலும் தானே அதற்கு செயலாளராக இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்திருந்ததாகவும் இதற்கு தாம் உடன்படாத நிலையில் வெளிநடப்பு செய்ததாக த.சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
The post புதிய கூட்டணிக்கு மான் சின்னத்தை மறுத்த புளொட், ரெலோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய கூட்டணிக்கு மான் சின்னத்தை மறுத்த புளொட், ரெலோ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
