லிட்டில் லண்டனாக மாறிய நுவரெலியா! – குஷியில் சுற்றுலா பயணிகள்
8 view
லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமகாலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பனிப்பொழிவு காலநிலை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நுவரெலியாவை பார்க்கும் போதும் அவ்வாறான உணர்வு ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளர். அண்மைக்காலமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் நிலவும் மாறுபட்ட காலநிலை மாற்றம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் ஏனைய பகுதிகளிலும் கடும் உஷ்ணமான காலநிலையும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post லிட்டில் லண்டனாக மாறிய நுவரெலியா! – குஷியில் சுற்றுலா பயணிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லிட்டில் லண்டனாக மாறிய நுவரெலியா! – குஷியில் சுற்றுலா பயணிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
