ரணிலின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு; பொங்கல் நிகழ்வில் தமிழ் தலைமைகள் கலந்துகொள்ளக்கூடாது எனவும் கோரிக்கை!
7 view
தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிக்கு எதிராக அமைதிவழி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. யாழ் பல்கலைக் கழகத்தில் பொது அமைப்புக்களுடனான சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த அழைப்பினை விடுத்தனர். வட கிழக்கு வாழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையில் தேசிய பொங்கல் விழா நிகழ்வுகள் யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர். பொங்கல் நிகழ்விவை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்து சர்வதேசத்திற்கு தமிழர்களுடன் இணைந்திருக்கின்றோம் என்பதனை வெளிப்படுததுவதே இதன் நோக்கம் என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி யாழிற்கு வருகின்ற பொழுது குறித்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழி போராட்டம் ஒன்றுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
The post ரணிலின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு; பொங்கல் நிகழ்வில் தமிழ் தலைமைகள் கலந்துகொள்ளக்கூடாது எனவும் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு; பொங்கல் நிகழ்வில் தமிழ் தலைமைகள் கலந்துகொள்ளக்கூடாது எனவும் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
