பிரச்சனைகளுக்கான தீர்வினை வழங்கிய பின்னர் ரணில் யாழிற்கு வருவதே சிறப்பு – சுரேஸ்!
7 view
யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவது என்பது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் யாழிற்கு வருவதற்கு முன்பாக படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கவேண்டுமென்ற கோரிக்கை, முன்வைக்கப்பட்ட போதும் அதனை அவர் நிறைவேற்றவில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று புதிய கூட்டணி தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் எமது செய்தி பிரிவு எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். உண்மையாகவே இது ஒரு தேசிய பொங்கல் நிகழ்வாக இருந்தால் வடக்கிலுள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வினை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் என்றும், ஆனால் இது கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளுக்கு பிழையான செய்தியையே வெளிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
The post பிரச்சனைகளுக்கான தீர்வினை வழங்கிய பின்னர் ரணில் யாழிற்கு வருவதே சிறப்பு – சுரேஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரச்சனைகளுக்கான தீர்வினை வழங்கிய பின்னர் ரணில் யாழிற்கு வருவதே சிறப்பு – சுரேஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
