மான், மரை என சின்னத்திற்காக அடிபடும் தமிழ் தலைமைகள் – காட்டமான அண்ணாமலை!
7 view
தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்று கூறிக்கொண்டு சில காலம் கூட்டமைப்பாக இருந்த மக்கள ஏமாற்றியதை தவிர வேறு எதனை தமிழ் மக்களுக்கு செய்துள்ளதாக வடமாகாண கடலோடிகள் அமைப்பின் இணைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார். மான் மரை என சின்னத்திற்காக அடிபட்டு கொண்டே தலைவர்கள் இருப்பாதகவும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து எதனையும் தமிழ் அரசியல்வாதிகள் செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு தீர்வு நோக்கிய ஒரு இலக்கு இருக்கின்றதா என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
The post மான், மரை என சின்னத்திற்காக அடிபடும் தமிழ் தலைமைகள் – காட்டமான அண்ணாமலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மான், மரை என சின்னத்திற்காக அடிபடும் தமிழ் தலைமைகள் – காட்டமான அண்ணாமலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
