ஈ.பி.டி.பி கட்சியில் இணைந்த வியாழேந்திரனின் சகோதரர்!
7 view
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் ஜே.வி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நடேசன் சுந்தேரசேன் ஆகியோர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் நேற்று (12) வியாழக்கிழமை இணைந்துள்ளதாக அக் கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் தம்பிபிள்ளை சிவானந்தராஜா தெரிவித்தார். கட்சியில் இனைந்தவர்களை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பு மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாக கொண்டு இயங்கிவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வடக்கு கிழக்கில் வீணைச் சின்னத்தல் தேர்தலில் போட்டியிடும் இந்த நிலையில், ஜே.வி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியின் முதன்மை வேட்பாளராக களமிங்கிய ந.சுந்தேரேசன் அவரின் ஆதரவாளர்களுடன் ஈபி.டி.பி. கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொண்டு கட்சியில் இனைந்துள்ளார். அவ்வாறே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரரான சதாசிவம் மயூரன்…
The post ஈ.பி.டி.பி கட்சியில் இணைந்த வியாழேந்திரனின் சகோதரர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈ.பி.டி.பி கட்சியில் இணைந்த வியாழேந்திரனின் சகோதரர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
