புத்தளத்தில் முஸ்லிம் சமூகத்தால் அமைதி எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு!
7 view
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் புத்தளம் சமூகமும், புத்தளம் முஸ்லிம்களும் அவமானப்படுத்தப்படுவதை கண்டித்து புத்தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) அமைதிப் எதிர்ப்புப் பேராட்டம் ஒன்று இடம்பெற்றது. புத்தளம் பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை மற்றும் புத்தளம் சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த அமைதி போராட்டம் புத்தளம் பெரிய பள்ளிக்கு அருகாமையில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஆரம்பமானது. ‘முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட உரிமையினைப் பாதுகாப்பதற்கான புத்தளம் மக்களின் குரல்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மஸ்ஜித்களின் நிர்வாகிகள், உலமாக்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர். இதன்போது ‘தனியார் சட்ட விவகாரத்தில் நீதியமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்’, ‘வாழும் பிரதேசத்தை நிர்வாணமாக்கிவிட்டு பல்தேசிய எஜன்டாக்களுக்கு சுககபோகம் அனுபவிக்கும் உங்கள் மானம் எங்கே?’, ‘பலதார மணம் ஆண்களுக்கான சலுகை அல்ல’, ‘சட்ட திருத்தத்தின் பின்புலத்தில் என்.ஜி.ஓ…
The post புத்தளத்தில் முஸ்லிம் சமூகத்தால் அமைதி எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் முஸ்லிம் சமூகத்தால் அமைதி எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
