தேசிய பொங்கல் நிகழ்வில் தமிழ் அரசியல் தலைமைகள் கலந்துகொள்ள கூடாது – ரணிலுக்கு எதிர்ப்பு
7 view
தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிக்கு எதிராக அமைதிவழி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இன்றையதினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளனர். வட கிழக்கு வாழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையில் தேசிய பொங்கல் விழா நிகழ்வுகள் யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஜெல்சின் தெரிவித்துள்ளார். பொங்கல் நிகழ்விவை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்து சர்வதேசத்திற்கு தமிழர்களுடன் இணைந்திருக்கின்றோம் என்பதனை வெளிப்படுததுவதே இதன் நோக்கம் என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி யாழிற்கு வருகின்ற பொழுது குறித்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதிவழி போராட்டம் ஒன்றுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து…
The post தேசிய பொங்கல் நிகழ்வில் தமிழ் அரசியல் தலைமைகள் கலந்துகொள்ள கூடாது – ரணிலுக்கு எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய பொங்கல் நிகழ்வில் தமிழ் அரசியல் தலைமைகள் கலந்துகொள்ள கூடாது – ரணிலுக்கு எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
